என்பெயருடன் "நேசத்தை" சேர்த்துக் கொண்டிருக்கிறேன்..!! என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அவதானிக்கிறேன்..அவற்றை இங்கே தொகுத்தளிக்க முயல்கிறேன் ..!!
Thursday, 30 March 2017
மகளெனும் மண்நிலவு
பிறைநிலவுத் தாரகை...
பேரழகு தேவதை...
பைந்தமிழ் பாடுபொருள்...
பண்பொழில் பூரணள்...
கண்விழி ஓரத்தில்
கனிவுதனை சூடியவள்..!
அக்கம்பக்கம் நோக்கிபின்
அளவுச்சேட்டை புரிவாள்...!!
எழில்மிகு மொழிதனில்
ஏற்றமிகு
மெய்யுரைப்பாள்..!!
எட்டி வந்து தோள் பற்றி
என்னுள்ளம் தான்
கரைப்பாள்..!!
மென்பஞ்சு குழல் கொண்டு
சூல்மேகம்
தான் படைத்தாள்..!!
தாயுள்ளம் கொண்டு
தந்தையையும் தாங்குவாள்..!!
தகப்பன் ஆளுமை கற்று
தன்சுற்றம் தானாளுவாள்..!!
கொடுத்து வைத்த உந்தன்
தமையன் உன்
பாற்கடல் மடியில்
தன்மெய் கொள்வான்..!!
Friday, 3 March 2017
அடவுகளும் அரவுகளும்
அடவுகள் கட்டி
ஆடுதிங்கு,
மக்களால் உருவான அரசு..!!
அரவுகள் கூடி,
நஞ்சிங்கு
சமைத்து கருவான அரசு..!!
தன்மான உணர்வுகள்
கலந்து
நாட்டை ஆண்டது ரொம்ப பழசு..!!
உறவுகள் சேர்ந்து
ஆள்வது தானே புதுசு ..
இதில்
மத்தியம் என்ன ..மாநிலம் என்ன..!!
பதவி தான முக்கியம்
மத்ததெல்லாம்
சாகட்டுமே முக்கியும் ..!!
காசு தானே சத்தியம்
மிச்சதெல்லாம்
தேவையில்ல அவசியம் ..!!
(தாமிரபரணி )தண்ணி எடுக்கத்
தடையில்ல ..இனி
உன் இரத்தம்
உறிஞ்சாலும் குத்தமில்ல ..!!
ஓட்டுக்கு
கைய நீட்டி கேட்டுபுட்ட காசு
நீ படும்
பாட்டுக்கு
அவன்
போட்டுபுட்டான் சபாசு ...!!
Thursday, 2 March 2017
புடவிச்சக்கரம்
காம்பிடம் சொல்லிப்
பிரிவதென்ன?
என்றோ ஒரு நாள்
ஏதோ ஓர் உலகில்
எங்கோ ஒரு கிளையில்
மீண்டும்
சந்திப்போம் என்றா ..?
புள் சிறகு மூத்து உதிர்கையில்,
பறவையிடம் பகர்ந்து
செல்வதென்ன ..?
எந்தத் திசையில்
எந்தப் பறவை
எந்த நிறம் என்றா ..?
புற்றரவு செதில்கள்
பிரிந்து விழுகையில்
எண்ணிக் கொள்வதென்ன ..?
யா வடிவம்
எந்தப் புற்று
எந்த காடு என்றா ..?
இப்புடவியில் .. நாம்
அறிந்ததுதான் என்ன ..?
புடவிச்சக்கரம் தனை
சுழலச் செய்வான்
பரம்பொருள் அவன் அறியக்கூடுமா ..??
Subscribe to:
Comments (Atom)
