வான்மேகம் தான்
அனைத்தும் அவள்
படைத்தாள்..!!
பூமலர்தேகம் தாம்
கொண்டு
பூவுலகில் அழகு
சமைத்தாள்..!!
கருநீல கூந்தல்
அமைந்து
கார்மேகம் அதற்கு
சவால் அமைத்தாள்..!!
மானின் இரு கண்கள்
கொண்டு
மாந்தர் தம் பணி
மறக்கச் செய்தாள்..!!
அவள் சிறுகை பற்றி
கடலலை
தன்னில் கால் நனைக்கையில்
நெஞ்சு நிறைய வைத்தாள்..!!
கோயில் சென்று
மீள்கையில் கூடவே
தேவதையொன்று வரும்போல்
எண்ண வைத்தாள்..!!
அன்றன்று பள்ளி
நிகழ்வுகள் பாங்காய் அவள்
மழலைப் பேச்சு
பகர்கையில்
பாவேந்தன் திடுக்கிடுவான்..!!
பாரதியும்
தோற்றிடுவான்..!!
--- அனலோன்
No comments:
Post a Comment