Thursday, 4 May 2017

பெண்கொண்ட பெருங்காதல்

நிலவுகள் கூடி 
பெண்மை சமைத்ததோ..

பெருவண்ணம் குழைந்து 
பேரின்பம் அமைத்ததோ..

ஆரிருள் இணைந்து
அணங்கென ஆனதோ....

இசையருள் இயைந்து
இன்பம் ஆனதோ...

இயற்கையென எண்ணி
தன்னுள்ளம் தான்
மயங்குதோ

மானிணை கண்டு
மானுட எண்ணம்
தான் கிறங்குதோ...

ஏனிங்கு..ஏனிப்படி.. என்று
எண்ணியிங்கு ஏங்குதோ

இது இப்படித்தான்..
அது அப்படித்தான்.. என்று
இயற்பியல் மீறுமோ...

இனி எது...? துணை எது...?
என தம் .. பிணை
தான் வினவுமோ..?

பெண்கொண்ட பெருங்காதல்
தரணியை
ஆளுமோ...?

--- அனலோன்

No comments:

Post a Comment