Thursday, 4 May 2017

ஆதலால் நான் ...

காய்ந்த சருகுகளினிடையே 
ஒரு சிற்றுயிரைக் 
கண்டு விலகி நடப்பீர்  எனில் 
நீரும் புத்தனே ..!!

தேங்கிய மழை நீரில் சிறிது 
கால் நனைத்து 
விசிறுவீர் என்றால் நீரும் 
குழந்தையே ..!!

சாலையில் நசுங்கிக் 
கிடக்கும் குழந்தையின் 
ஒற்றைச் செருப்பைக்காணுகையில் 
பதறுவீர் என்றால் நீரும் தகப்பனே..!!

ஓங்கிய பெருங்காற்று வீசுகையில் 
சேரிக்குடிசைகளை 
நினைத்து உளம் தவிப்பீர் எனில் 
நீரும் தலைவனே..!!

சகமனிதன் பசியால் துடிக்கையில் 
பதறி ஓடி 
பரிமாறுவீரா..?? நீரும் 
பரிசுத்த தேவனே ..!!

---- அனலோன்

No comments:

Post a Comment