முன்காலை ஈருருளி
பயணத்தில் வண்ணமில்லா
நீர்ப்பூக்கள் முகத்தில்
ஒத்தடம் கொடுத்தபடி இருந்தன..!!
தலைக்கவசத்தை நெகிழ்த்தி
சற்றே மழை ஆசீர்வாதத்தை
பெற்றுக்கொண்டேன்..!
மழை மகளின் ஓரப்பார்வை
பெருநகர மக்களின்
மீது சிறுமழையாக விழுந்தது..!!
நிலமகள் கொஞ்சம் மகிழ்ந்து
ஆவலுடன்
அள்ளிப் பற்றிக்கொண்டாள்..!
மெல்ல மேனி சிலிர்த்து
ஏக்கத்துடன்
மண்வாசனைப்
பெருமூச்சுவிட்டாள்..!!
இன்னும் கொஞ்ச நேரம்
உன் கருணை விழிகள்
எமக்காக
திறந்திருக்கலாம்..!!
ஆசையோடு நாங்கள்
நீரள்ளிப் பருகியிருக்கலாம்..!!
----- அனலோன்
No comments:
Post a Comment