Thursday, 20 April 2017

சன்னலோரம்...

பேருந்தின் சன்னலோர 
இருக்கையில்  அதீத சுவாரசிய சுகமுண்டு..!!
நொடியில் மரங்களை, மனிதர்களைக் 
கடந்து செல்ல முடியும்..
நம் எண்ணங்களில் ஆழ்ந்து கொண்டே  ..!!


நமக்கே நமக்கான இடம்போல் 
தனிமையின் சுவருக்குள் 
நிகழ் ஒளி ஒலிபரப்பு காட்சிகள்..!!
என்ன ஒன்று, கைக்கோள் இருப்பதில்லை..!
தேவையுமில்லை..!!


பகல் நேர சன்னல் சற்று 
பரவசமளிக்கக் கூடியது..!!
நொடிக்கு நொடி காட்சிகளும் 
கலவையான ஒலிகளும் மாறிக் கொண்டே இருக்கும்.
முப்பரிமாண தியானத்திற்கு 
இட்டுச் செல்லக்கூடியது..!!


இரவுச்சன்னல் பெரும்பாலும் 
ஒற்றைத்தனிமையை 
உணர்த்திக் கொண்டே இருக்கும்..!!
மின்னொளிகளும், சிலசமயம், நிலவொளியும் 
துணை வரும்..!!


கையளிக்கப்பட்ட நமக்கான 
வாழ்வும் 
அவ்வாறு தானோ..?
அல்லவைகளும் நல்லவைகளும் 
நம் தெரிவுகள் தானோ ..?

No comments:

Post a Comment