Thursday, 20 April 2017

தண் நிலவே

மென்பூவே என் வாசல்  வாராயோ ..?
தண் நிலவே உன் நிழல் நான் எனத் தேராயோ ..?

கண் இமை நீயென உணராயோ..
காதல்கடலலை நீயின்றி 
அமையாது ..உணராயோ ..?

என்னுள்ளம் நின்னைப் பாடி 
கரையும் கேளாயோ ..?

உன் எண்ணம் 
நானென தெளியாயோ ..?

உன் பொய்க்கோபங்கள் 
காதலே என்று அறியாயோ..?

என் மென்தீண்டல்கள், சீண்டல்கள் 
பெருங்காதலே என்று பொறுக்காயோ ...?

No comments:

Post a Comment