ஏனென்றால் உன் பிறந்த நாள் ...!!
நீ உறங்கும் நிமிடங்கள்
உன் அழகின் வசீகரத்தை
அதிகரிக்கும் ..!!
என் தாயின் ஸ்பரிசங்கள்
உன்னின் ..
ஒவ்வொரு தொடுதல்களிலும்
உணர்கிறேன் ...!!
ஆலமாய் என் உறவுகளைத்
தாங்குகிறாய் ...!! கடலின்
ஆழமாய் நம் காதலைப்
போற்றுகிறாய் ...!!
உன்னின் என் மேலான காதல்
என்னினும் மேலானதாகவே
இருக்கிறது எப்போதும் ..!!
கைமாறென்று இதற்கு ஒன்று
தோன்ற வில்லை எனக்கு ...!!
என் ஏழு ஜென்ம காதலும்
உன்
காலடி கீழேயே இருக்கும்..!!
என் விந்து சுமந்து , என் வம்சம்
வளர்த்தவள் நீ ..!!
என் உந்து விசையும் நீ ..!!
காதல் வாழ்க ..!!அதிலும் நம் காதல்
வாழ்க நூறாண்டு ...!!
- மாறாக்காதலுடன் பிரதீப்.

No comments:
Post a Comment