Saturday, 19 December 2015

மாமனுக்கு ஒரு சொல் ..!! A Tribute to my Uncle


செல் காலமும், திகழ் காலமும்
வருங்காலமும்,

வாழ்த்தித் துதியும்
வருணனை வாழ்த்துவோம் ..!!

மதவேழமாய் , மழைமேகமாய் , பருப்பொருளாய்

வாழும் கலையைப்
போற்றுவோம்...!!


கருநீலவண்ணனாய் , கார்முகில் மன்னனாய்
நானிலம் போற்றும் தூயவனை
வாழ்த்துவோம் ...!!

நீ கடந்து வந்த முட்பாதை
ஊரறியும் ..!!
நீ முற்றரியா குழந்தை என
சுற்றமறியும் ..!!


மருகனென எண்ணியதில்லை
மாமனென்றும் உனை நான் எண்ணியதில்லை ..!!


உன் தாழ் தனை பணிந்து சென்னி சூட
மைந்தர் பலருண்டு ..!!
உன் அன்பெனும் வாள் தனை வீழ்த்த
தரணியில் எவருண்டு ..!!
இரந்து வந்தவர்க்கு நீ ஈந்தது பல ..!!
அதன் பொருட்டு இழந்தது பல ..!!


கவலை வேண்டாம் ..கலங்க வேண்டாம் ..!!
ஆற்ற வேண்டிய பணிகள் பல ..!!
ஆற்றலுண்டு நூறாண்டு சில ...!!
முக்கண்ணனின் முகமுண்டு உனக்கு ..!!
முருகனின் அருளுண்டு உனக்கு ..!!
வாழ்க பல்லாண்டு சந்ததி பல கண்டு ..!!

No comments:

Post a Comment