எவன் சொன்னது பூக்களுக்கு
கை கால் இல்லையென்று...?
பள்ளி விட்டு பஸ்சிறங்கி
பாய்ந்தோடி வரும்
செல்ல மகளைப் பாருங்கள்...!
எவன் சொன்னது குயில்கள்
பேசுவதில்லையென்று...?
அவள் பகரும் ரைம்ஸ் கேளுங்கள்...!
வண்ணத்துப்பூச்சிக்கு
வாயில்லையா என்ன..?
அவள் கதை சொல்லச் சொல்ல
கேளுங்கள்...!
பாற்கடல் உறைபவன் மட்டுமா அழகு?
அவளுறங்க உச்சி மோருங்கள்...!!
கனல்வண்ணன் ஆடியது மட்டுமா
திருவிளையாடல்..?
அவள் பின்னோடி அன்னமூட்டிப்
பாருங்கள்...!!
"பொய்மையும் வாய்மையுடைத்த" என்று வள்ளுவன் பகன்றது எதை..?
அவள் அகவும் காணொணா கற்பனைக் கதை தானே..!!

No comments:
Post a Comment