Saturday, 19 December 2015

இவ்வளவு நேரம் எங்கிருந்தாய் ...???






முன்னிரவுப் பொழுது ..
கண்கள் செருக ...
விளக்கணைக்கத் தோணுகையில் ...
கைகளைப்பற்றி , ஏதோவொரு உலகில்
சஞ்சரித்து ... பின்னர் நம்மிருவரின்
எண்ணங்களும் நேர்கோட்டில் நிற்க ...
கண்களும் ஒருகணம் நோக்கி
விலகிப் பின்
உள்ளுணர்வு உந்த ...காதல் அங்கே தொலைகிறது ..!!
அதைத் தேடுகிற பாவனையாய் ...சேர்ந்த கைகள் விலக மறுத்து ..
அட எங்கே போனதிந்தக்காதல்..?
புள் மேல் விடி பனியாய் ,
வியர்வைத்துளிகள் இரு தேகமெங்கும் எட்டிப் பார்க்க ...!!
இயக்கங்கள் அற்று ...தேகங்கள் இருபுறம் மெல்ல சோர்ந்து...
சாயும்போது ...வாஞ்சையாய் முன்நெற்றி முத்தத்தில் ,
காதல் மெல்ல பூக்கிறது ...மீண்டும்..!!
அட இவ்வளவு நேரம் எங்கிருந்தாய் ...???

No comments:

Post a Comment