Monday, 5 January 2015

காமம் எனும் கனல்...!!!


அன்றலர்ந்த மலர் போல் இருக்கிறாய்...
அவணியிற்சிறந்த அழகு உன்னது...
சிறிய கண்களும் சிவந்த அதரங்களும்
உன்மத்தை ஊட்டுகின்றன..


நனைந்த உன் மேலாடை
என்னுள்
ஒரு கிளர்ச்சியைகிளப்பும்...
உன் கூந்தல் மணமும்,
கூம்பி நிற்கும் உன் முன்னழகும்...
தொட்டணைக்க தூண்டும்..!!


என் தோளில் நீ சாய்ந்தணைக்க...
தாமரைக்கிண்ணங்கள் இரண்டும்
என் மார்பை பதம் பார்க்கும்..
ஈர மேலாடை சொட்டும் நீர் மொட்டாக
இக்கணமே மாறி விட மாட்டேனா?


நீர் முத்து கண்ட உன் உள்ளழகை
நான் காண மாட்டேனா?
உன் நெற்றி மேல் விழுந்த நீர்த்துளி..
பயணம் செய்யும்
பாதை பின்தொடர ஆசை..!!
என்னதவம் செய்தனவோ..?!!

தேன்மேனியெங்கும் ஈ போல் நீர் மொய்க்க ..
என் பாலைவன தாகம் தீர்க்க ஆசை..!!
உன் மேனி கொண்ட மேடு பள்ளங்களை
என் மூச்சுக்காற்றால் அளந்து பார்க்க ஆசை..!!

பனங்கள் பானைக்குள் விழுந்த
சிற்றெறும்பாய்
உன்மத்தம் ஏறிக்கிடக்கிறேன் உன் தேகம் தழுவிய பின்...!!

No comments:

Post a Comment