கோடி மலர் முகங்கொண்ட
எங்கள்
குடும்பத்தலைவனுக்குப் பிறந்தநாள் இன்று..!!
வைரம் போல் நெஞ்சுரம் கொண்ட
எங்கள் வழிகாட்டி உதித்த பொன்னான நாள் இன்று ..!!
தொய்ந்த உன் குரலைக் கேட்டதில்லை
இதுவரை ..!!
சிம்மக்குரல் கர்ஜனை உன் மொழியேயன்றி
வேறில்லை...!!
அனுதினம் எங்களை செதுக்குகிறாய் ..
ஆணி வேராய் எங்களுள் நிலைக்கிறாய் ...!!
அலைபேசும் மொழிகள் யாவும்
உன் பேர் பாடி நிற்கும் ..!!
செல்பேசி என்றதும் உன்பேர்
உயர்ந்து நிற்கும் ...!!
எண்ணிலடங்கா தடைகள் பல
நீ கண்டதுண்டு ...
இனி ...
மண்ணிலடங்கா ..பேர் புகழ்
என்றும் உனக்குண்டு ..!!
உலகை உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்ட
தகவல் தொடர்புத் துறையில்
எங்களுக்கான ஜன்னல்களை திறந்து வைத்தாய் ...
மனித உழைப்பு நீராய் உறிஞ்சப்படும்
இவ்வுலகில்
மனித உறவுகளைக்கொண்டு புதியதோர்
உலகு படைக்கிறாய் ...!!
திரு.சுந்தரம் பெற்ற சுந்தரனுக்கு ,
அலைபேசி நுட்பம் நிறைந்த வித்தகனுக்கு ,
இனி வரும் காலம்...பார் புகழும் காலம்...!!
ஒரு தந்தையாய் , விந்தையிலும் விந்தையாய் ,
மூத்த சகோதரனாய் எங்களை வழிநடத்தும்
தலைவனை வாழ்த்துகிறோம்...!!
நீ வாழ வேண்டும் பல்லாண்டு ...!!
No comments:
Post a Comment