எங்கள் ஆலமரம்..!!
இங்கே பறவைகள் நாங்கள்
உண்டு களித்து விடை பெறுவதில்லை ...!!
நாங்கள் கிளைகளாய் , விழுதுகளாய் , ஆணி வேர்களாய்
பூக்களாய், ஆலங்கனிகளாய்
பரவ விழைகின்றோம் ..!!
இங்கே...எங்கள் ஆலமரத்தில்
கூடுகள் கட்டப்படுவதில்லை...! மரமே கூடாய் ...!!
எங்கள் மரத்திற்கு நீர் தேவையில்லை ..
எங்கள் இரத்தமே நீராய்..!!
நாங்கள் இங்கே பணியிலில்லை ...!!
வாழ்கிறோம் ..
பெரிய மரமே தன கூடென்று
வாழ்பவர்க்கு ..தனிக்கூடென்று ஒன்று
உண்டா என்ன ...??
கற்பித்தல் இல்லை இங்கு
ஆனாலும்..நாங்கள் இங்கே கற்றுக்கொண்டதும் பெற்றுக்கொண்டதும் அதிகம் ...!!
இல்லறமும் ...பணி என்னும்
நல்லறமும் இனிதே இயைந்தது எங்களுக்கு ..!!
எங்கள் ஆலமரம்
ஒரு நிறுவனமோ..அலுவலகமோ அல்ல ...
இது ஒரு இயக்கம்..
ஆம்..!!
ஆயிரம் இதயங்களின் ஒட்டுமொத்த இயக்கம் ...!!
விரைவில் பேரியக்கம் ..!!
எட்டாண்டுகளில் எட்டாத உயரத்திற்கு
தழைத்தோங்கியிருக்கும்
எங்கள் இயக்கம் ... மேகங்களை முட்டித்தள்ளி
மேன்மேலும் கிளைத்தோங்கும் ...!!
அவனியெங்கும் கடல்கடந்து
எங்கள் விழுதுகள் பரவிச்செல்லும் ...!!
செல்லும் வழியெங்கும்
தடைகளை நிரவிச்செல்லும் ...!!
நாள்தோறும் எங்கள் சாதனைகளை
விரவிச் சொல்லும் ...!!
இங்கே பறவைகள் நாங்கள்
உண்டு களித்து விடை பெறுவதில்லை ...!!
நாங்கள் கிளைகளாய் , விழுதுகளாய் , ஆணி வேர்களாய்
பூக்களாய், ஆலங்கனிகளாய்
பரவ விழைகின்றோம் ..!!
இங்கே...எங்கள் ஆலமரத்தில்
கூடுகள் கட்டப்படுவதில்லை...! மரமே கூடாய் ...!!
எங்கள் மரத்திற்கு நீர் தேவையில்லை ..
எங்கள் இரத்தமே நீராய்..!!
நாங்கள் இங்கே பணியிலில்லை ...!!
வாழ்கிறோம் ..
பெரிய மரமே தன கூடென்று
வாழ்பவர்க்கு ..தனிக்கூடென்று ஒன்று
உண்டா என்ன ...??
கற்பித்தல் இல்லை இங்கு
ஆனாலும்..நாங்கள் இங்கே கற்றுக்கொண்டதும் பெற்றுக்கொண்டதும் அதிகம் ...!!
இல்லறமும் ...பணி என்னும்
நல்லறமும் இனிதே இயைந்தது எங்களுக்கு ..!!
எங்கள் ஆலமரம்
ஒரு நிறுவனமோ..அலுவலகமோ அல்ல ...
இது ஒரு இயக்கம்..
ஆம்..!!
ஆயிரம் இதயங்களின் ஒட்டுமொத்த இயக்கம் ...!!
விரைவில் பேரியக்கம் ..!!
எட்டாண்டுகளில் எட்டாத உயரத்திற்கு
தழைத்தோங்கியிருக்கும்
எங்கள் இயக்கம் ... மேகங்களை முட்டித்தள்ளி
மேன்மேலும் கிளைத்தோங்கும் ...!!
அவனியெங்கும் கடல்கடந்து
எங்கள் விழுதுகள் பரவிச்செல்லும் ...!!
செல்லும் வழியெங்கும்
தடைகளை நிரவிச்செல்லும் ...!!
நாள்தோறும் எங்கள் சாதனைகளை
விரவிச் சொல்லும் ...!!
No comments:
Post a Comment