பூப்படைந்த சிறுமியிடம்
ஒரு இறுக்கம்
வந்து குடியமர்கிறது ..!!
உடலின் எந்த ஒரு பாகத்திலும்
கண்களைப் பெறுகிறாள் .
மையவிழி மட்டுமன்றி
ஓரவிழிகளும் புலன் கொள்கின்றன .
எதிர்நோக்கும் பார்வைகளை
உய்த்தறிகிறாள் ..!!
அவற்றை
தரம் பிரிக்கவும்
கூடுகிறது ..!!
அவளுள் அம்மாற்றத்தை
அவளுள் குடிவரும் ஏதோ ஒரு தெய்வம்
செய்கிறது ..!!
அவளே பின்னர் மணமாகி
அன்னையாகி கனிகையில் ...
அத்தெய்வம் அவளை விட்டு
வெளியேறுகிறது ...!! முதல் குழந்தை
அவளை மாற்றுகிறது ..!! இப்போது
அவள் மீண்டும் சிறுமியாகிறாள் ..!!

No comments:
Post a Comment