இரவுகளின் நீளம்
அதிகரிக்கும்...உன் கனவுகள்
நான் காணும் போது…!
பகல்களின் பொழுது
சட்டென அடங்கும்...உன் ஸ்பரிசம்
நான் உணரும் போது...!
பின்னிரவுப் பறவையின்
பாஷைக்கும்
அர்த்தம் கற்பிக்கத் தோன்றியது
உன் மழலை கேட்கும் போது....!
கோடையின் மழைநாள் சூரியனைப்போல
வெட்கி வெட்கித்தான்...
பேச முடிந்தது...
என் காதலை ஏந்தித் தவித்த போது....
--- பிரநேசம்.
No comments:
Post a Comment