Friday, 27 August 2010

மரித்துவிட்ட நான்...!!!


மரித்துவிட்ட நான்...!!!

பின்னிரவுக் கனவொன்றில்
பெயரறியாப் பறவையொன்று
விரித்த சிறகில்
பொன் நிற சிசு ...
அது தன் முகம் ...
நான் அதிகம் பார்த்தறிந்த ஒன்று ..!!
ஆம்..! என் அறை நிலைக் கண்ணாடி ..!!

விளங்க வெகு நேரமாயினும்
விசனங்கள் தெளிந்தது வெகு நேர விடைக்குப்பின்பு ...!!
சிசுவை தூக்க முயற்சிக்கிறேன்
பறவை விலகி நடக்கிறது ..
பின்தொடர பின்தொடர பதறுகிறேன் ...

அடர்சுருள் கம்பிக்குள் தூரமாய் சென்று மறைய
அறிகிறேன் என்னை அந்நியமாய் ...
அணைதெடுக்கிறாள் என் சிசுவை
தமிழன்னையொருத்தி ...

அட இதுவும் பார்த்தறிந்த முகம்..
என் மனைவி ...என்ன இது அலங்கோலம்
பொட்டைக்ககாணோம் ...!!
வெண்ணிறக் கூடாரமொன்றில் ..தாயும் சிசுவும்
பிரித்தெடுக்கப்பட்டு ..
"நாலாவது மாடி" சொர்க்கத்துக்கு
கொண்டு செல்லப்படுகிறாள் ..என் மனைவி

புலரப் புலரப் புரிகிறது
தெரிகிறது என் உடலில் பதிந்து விட்ட புலிவரி ..!!
உதிரம் தெறிக்க ..போர்த்திவிட்ட புலிக்கொடி ...
வேண்டுகிறேன் இன்னோர் பிறவி ..
இப்போது மரித்துவிட்ட நான்...!!!

------------ பிரநேசம்

No comments:

Post a Comment