Saturday, 15 May 2010

சிங்கள சீழ்...!!!


சிதறியது சில்வண்டுக்கூட்டம்..,

என சிரித்துக் கும்மாளமிடும் குள்ளநரிகள்..

மேற்கத்தியமும் இறையாண்மைக் கூட்டமும்

முந்தியடித்து செய்த துரோகங்கள்...!!

தன் காலுக்குக் கீழ் பிடித்த

சிங்கள சீழ் தம்முடம்பு பற்றும் என்றெண்ணி,

வேரையே வெட்டிவிட்ட எங்கள் நாடு..!!

சூழ்ந்துவிட்ட சீனவன்...!!

அனுமனின் பாலம் மட்டும் இருந்திருந்தால்..

பாய்ந்தோடி வந்திருப்போம்..!!

கையெட்டும் தூரத்தில் காளை,கன்னியர்

உயிர் துறக்க..,

எங்கள் வீட்டு சன்னல்கள்

இறையாண்மைச் சட்டை அணிந்திருந்தன...!!

பன்றிகளும்,பல நரிக்கூட்டமும்

பகட்டு மாலை அணிந்தாலும்..

"சிரித்த புத்தனின்" இதயம் சிங்கள சீழுடன்...!!!

மாலையில் மறையும் ஆதவன்

உதித்தே ஆகவேண்டும் காலையில்... அதுவே நியதி..!!

தீவிரவாத சாயம் பூசிய அதே மேற்கிலிருந்து

உதிப்பான் சுதந்திர ஆதவன்..!!

வடிவம் மாறலாம் .. வடிவு மாறாது...!!

விழித்தெழுகிறது எம் சனம்...!!

--பிரநேசம்

No comments:

Post a Comment