Wednesday, 24 February 2010

ஆதியில் ஆப்பிள்...


காது மடல் நுனி...

கழுத்துப்புறம் ஏதோ ஊர… ,

கண்ணெதிரில் நட்சத்திரங்கள்… !

கால்கள் பின்னி

ஊர்ந்த கைகளுக்கிடையே

சிக்கித்தவித்தது வெட்கம்… !

படர்கையில் பாதிதேகம்

நிலைக்கண்ணாடியில்…,

தோன்றி விலக,

மறைந்து சிரித்தது வெட்கம்…!

பின்னிரவுப்பறவையொன்று

ஜன்னல் வழிபார்த்து

சீட்டியடித்தது….. !


மயக்கம் பாதி, தயக்கம் மீதி…

முடிவில் முதலாவது ஜெயிக்க,

தயக்கமும், வெட்கமும்…

கட்டில் நுனியில்… !

தேக அணுக்கள்ஒன்றாகக் குவிந்து,

பின்..ஒவ்வொன்றாய் பிரிய…

வியர்வைத்துளியில்,

கழுவப்பட்டது நாணமும் , தயக்கமும்…. !

புரியாத புதிராய்புதிதாய்த்

தொடங்கத் தொடங்க,புரியாதவை

புலப்படலாயின…!

இருபது வருடங்களாய்

பூட்டிவைத்தபொக்கிஷங்கள்

கொள்ளையிடப்பட்டும்,வாரி வழங்கிய திருப்தியும்,


மிதமிஞ்சிய உணவுண்ட திருப்தியும்,

உண்டாயின…. !

மூச்சூக்காற்றும் வெப்பமாக,

வியர்வையில் தேகம் தெப்பமாக…!

களைத்து விலகும் போது


காதல் மட்டும் பிரவாகமாய்ப்பொங்கும்….. !

வாழ்க…… !

ஆதியில் ஆப்பிள் கடித்தவன்…. !

உன் சிலநிமிட காத்திருப்புகள்...


நீயின்றி நான் கடக்கும்

சோலையில் உணர்ந்தேன்

பாலையின் வெப்பத்தை…!!

உனதுமழைத்தாகம் தெரிந்தோ என்னவோ,

நாமில்லா சமயங்களில்

பெய்வதில்லை மழை …!!

உனக்குத் தெரியுமா உன் உச்சந்தலை

தொட்டமுதல் மழைத்துளிஎதுவென…… ?!!!

நீ காத்திருக்கும் நிறுத்தத்தில் நீண்டநேரம் என் பேருந்து நிற்பதாய்

எனக்குள் பிரமை… !!!

காத்திருப்புகளும்,

சில நொடி கவனிப்புகளுந்தான் காதலின் சொர்க்கம்...

உனக்கான ...பூக்கள் வாங்கிய

கடைக்காரன் ஏளனமாய்ப்

பார்க்கிறான் இன்று……

உனது மறுதலிப்பு

அவனுக்குத் தெரிந்திருக்க

வாய்ப்பில்லை…! எனக்கான

உன் சிலநிமிட காத்திருப்புகள்

என்னுள் ஏற்படுத்திய

அதிர்வுகள் பல…! இன்று நீ

எனக்காகக் காத்திருப்பதில்லை…!

இருந்தாலும் ,

நான்தவறவிட்ட

சில நிமிடங்கள் தான்,

எனக்குத் தரப்பட்ட அவகாசங்கள்

என்பதை நான்உணரவில்லை……!

நாம் ஏன் மீண்டும் பிறக்கக் கூடாது…….

நமக்கான ,

நமது காதலைப்புரிந்து

கொள்ள….?!!!

--பிரநேசம்.

வெவ்வேறு திசைகளில்…

நீ எனக்கானவள்இல்லை

எனத்தெரிந்த பின் தான்

உன்மேலான காதல்

மேன்மேலும்உயிர்த்தெழுகிறது…..!!

உனது விடலைத்தன காதலின்

ஆழம் புரிந்த பின்தான்

எனதான காதல்

தன்னைத் தானே சோதித்தறிகிறது. …..!!

உனக்கே தெரியும் நமது

சம்பாஷணைகளின் தொடக்கங்களும் முடிவுகளும்

வெவ்வேறு திசைகளிலேயே

பயணித்திருக்கின்றன. …..!!

எனக்குத் தோன்றுவதுண்டு ,

சில நேரம் …

நமது உரையாடல்கள்

முடிவேயில்லாமல் நீண்டு விட்டாலென்ன… …..!!

ஈழத்தின் விந்து ...

ஈழத்தின் விந்து

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி...


அன்புச்சகோதரன்

அமரர் முத்துக்குமாருக்கு…. அகவை 27 உனக்கு…

ஆனால் 60 ஆண்டுகால சுதந்திர வேட்கையை

ஆறேழு நிமிடங்களில்

அகில உலகிற்குணர்த்திய

அமரருள் அமரன் நீ…!

உன் சமகால வயதில் வாழ்ந்ததற்குப்பெருமைப்படுகிறோம்…

என் பிள்ளை..என் மனைவி..என் வீடு..

என்றிங்கு வாழும்..

எதார்த்தவாதிகளுக்குள்ளும்

ஏற்படுத்திவிட்டாய்,உன் தாக்கத்தை….!

ஈழத்தின் சிறு விந்தும்,

ஏந்திச்செல்லும் உன் தீரச்செயலை…

நீ மூச்சு விடும் பொழுது ,

உன் முகம் தெரியவில்லை…

ஆனால் உன் மூச்சடங்கிய பின்னர்

எல்லோருக்குமானவனாகியிருக்கிறாய்….!

ஆம் எங்களை மாணவர்களாக்கியிருக்கிறாய்….

வாழ்க நின் தீரம்….!

இனி ….!

ஐயா…தமிழ் கூறும்

நல்லுலகின் அக்கினிக் குஞ்சுகளே……!

போதும் உங்கள் ….

கட் அவுட் பாலாபிஷேகம்…!

போதும் உங்கள் ….நாலாந்தர ரசிகர் மன்றம்…!

போதும் உங்கள் ….கலாசார காபந்து மோகம்…!

துயில் எழுக…பொங்குக… பொங்குக……!

இனியும் பொறுத்திடலாகாது…!

தீயினின்று…சிறகுவிரித்த ஃபீனிக்ஸாய்…

சிகரம் தொட்ட சோழனாய்…


வேழங்கொண்ட சேரனாய்…

நீதி காத்த பாண்டியனாய்…

ஒவ்வொருவரும் ஏந்துக ஆயுதம்…

இனியொரு விதி செய்வோம் …..

பின்வாங்குதல் தோற்றலன்று…

அணையும் ஜோதி பிரகாசிப்பது போன்றது இது…!

இடி மின்னல்கள் முழக்கமிடும் இனி…

கடும்புயல் மையம் கொள்ளும் இனி…

நீள்துயில் கலைந்தது…!

மீளாத்துயிர் மறையும்

காலம்வெகுதூரம் இல்லை…!

வெல்க ஈழம்…..வாழ்க தமிழீழம்…..!

. — பிரநேசம்.
வெகு விரைவில் என்னுடைய பதிவுகளை இங்கே காணலாம் ...
மேலும் என் மற்றுமோர் வலைப்பூ ...
http://pradeepnesam.tamilblogs.com
என்னுடைய வலைப்பூவிற்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறேன் ...