அவர்கள் அறிந்திருக்கவில்லை
அந்நாளைய
பார்வை பரிமாற்றங்கள்
என்றென்றுக்குமானவை அல்ல என்று ..!!
அந்நாளைய
பார்வை பரிமாற்றங்கள்
என்றென்றுக்குமானவை அல்ல என்று ..!!
அவர்கள் அறிந்திருக்கவில்லை
அவர்களின் குறுஞ்செய்திகள்
நீணாள் பயணிக்கப்போவதில்லை என்று...!!
அவர்களின் குறுஞ்செய்திகள்
நீணாள் பயணிக்கப்போவதில்லை என்று...!!
அவர்கள் அறிந்திருக்கவில்லை
அவனின் ஆயுள் நாட்கள்
காதலின் தொடக்கத்தில் எண்ணப்பட்டது என்று ..!!
அவனின் ஆயுள் நாட்கள்
காதலின் தொடக்கத்தில் எண்ணப்பட்டது என்று ..!!
அவர்கள் அறிந்திருக்கவில்லை
யுத்த களங்களில்
ஆட்டுக்குட்டிகள் மேயலாகாதென்று ...!!
யுத்த களங்களில்
ஆட்டுக்குட்டிகள் மேயலாகாதென்று ...!!
அவர்கள் அறிந்திருக்கவில்லை
முரட்டு ரயில்
பூக்களை முகர்ந்து
பார்ப்பதில்லையென்று ..!!
முரட்டு ரயில்
பூக்களை முகர்ந்து
பார்ப்பதில்லையென்று ..!!
அவர்கள் அறிந்திருக்கவில்லை
சாதி என்பது
உள்ளூறிய சீழ் என்று ..!!
சாதி என்பது
உள்ளூறிய சீழ் என்று ..!!
அவர்கள் அறிந்ததெல்லாம்
தூய வெண்பனி நிகர் காதலைத்தான் ..!!
தூய வெண்பனி நிகர் காதலைத்தான் ..!!
அவர்கள் அறிந்ததெல்லாம்
ஆதி மனிதன் ஆராதித்த காதலைத்தான் ..!!
ஆதி மனிதன் ஆராதித்த காதலைத்தான் ..!!