Saturday, 22 June 2013

நீள் நதி ஓரத்தில்...


நீள் நதி ஓரத்தில்.

நெடுமர நிழல் ...

வெயில் தாழும் நேரம் ..

வெண் பறவைக்கூட்டம்...!!

தண்ணீரில் எறிந்த தவளைக்கல்லாய்

எண்ணங்கள் பல ..என்னுள்ளே

குளிர் காற்றில் மிதந்து வரும் மெல்லிசை..

மொழி புரியாவிடினும் ,

அவ்விசை உணர்த்தும் ஓராயிரம் ..சேதி

அந்நிய நாடு...

அந்நியோனியமாய் தெரிகிறது ..

கைகாட்டி சிரித்து

கடந்து செல்லும் ஒரு வெள்ளைக்குழந்தை ..

உணர்த்தும் ஆயிரம் சேதி..


மனிதர் பலவிதம்..

கலாசாரம் ஒவ்வொன்றும் ஒருவிதம்..

வியக்கிறேன் ... படைத்தவனை..

மனிதரில் நிறம் பல வைத்தான் ...

குருதியில் நிறம் ஒன்றையே வைத்தான்

மலத்திலும் நிறம் ஒன்றையே வைத்தான் ..

ஆனால் மாந்தர்க்கிது புரிந்திடல் தடுத்தான் ..

நீள்நதி அமைதியும் ... நெடுமர நிழலும் ...

குழந்தையின் சிரிப்பும்

கண்டு நீயே உணர்ந்துகொள் என்றான்..

வோல்காவும் , தேம்சும் , காவிரியும் ஒன்றென உணர்வது எப்போது..?!!

மனதின் நீட்சிதான் கனவென தெளிவது எப்போது..?