Friday, 1 April 2011

தேர்தல் விழா…!!

இதோ மீண்டும் வந்து விட்டது … தேர்தல் விழா…!!
மீண்டும் கேட்க நேரலாம் .. பசப்பு வார்த்தைகளை ..
கேட்க நேரலாம் … பொங்கு தமிழ் வார்த்தைகளை …
கேட்க நேரலாம் … காது கூசும் வசவுகளை…
சில்லறை சத்தங்களை …
பிரியாணி வாக்குறுதிகளை …!!
கூட்டணி பேச டெல்லி செல்வோம் …
சீட்டு வாங்க டெல்லி செல்வோம்…
நோட்டு வாங்க டெல்லி செல்வோம்…
ஆனா மீனவன் செத்தா … தந்தி அடிப்போம்..
கோடி பணம்னா … முந்தி நிப்போம்..
மகனுக்கு பாதி..மகளுக்கு பாதி..
மனைவிக்கு பாதி…துணைவிக்கு மீதி…!!
படைச்சவன் வந்தா …அவனுக்கும் பாதி..!
கேள்வி கேட்க எவனும் இல்ல…
கேள்வி கேட்டவனும் … கூட்டணிக்குள்ள ..!!
அட போங்க பாஸ் …இவனுங்க எப்பவுமே இப்படிதான் …!!